பொலித்தீன் பைகளுக்கு நுகர்வோரிடம் கட்டணம் அறவிட திட்டம் – சுற்றாடல் அமைச்சு நடவடிக்கை!

சிறப்பு அங்காடிகளில் கொள்வனவு செய்யப்படும் பொருட்களை கொண்டு செல்வதற்காக வழங்கப்படும் பொலித்தீன் பைகளுக்காக நுகர்வோரிடம் கட்டணம் அறவிடும் வகையில் சட்டத்திருத்தத்தை மேற்கொள்வதற்கு சுற்றாடல் அமைச்சு திட்டமிட்டுள்ளது.
சிறப்பு அங்காடிகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது கட்டுப்பாட்டை மீறி பொலித்தீன் பைகள் விநியோகிக்கப்படுவதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சுற்றாடலுக்கு பாரிய பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இவற்றை கருத்திற்கொண்டே சட்டத் திருத்தத்தை மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சூதாட்டம்: இலங்கை அணி முன்னாள் தலைவரிடம் விசாரணை!
27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு - எதிர்வரும் 8 ஆம் திகதிமுதல் 3 மாத காலங்களுக்கு நடைமுறையில...
ஐந்து தசாப்தங்களின் பின்னர் மாலைதீவிலிருந்து இரத்மலானைக்கு நேரடி விமான சேவை!
|
|