பொலித்தீன் இன்னும் 6 மாதங்களுக்கு கையிருப்பில் இருக்கும் – பொலித்தீன் உற்பத்தியாளர் சங்கம்!

லன்ஞ்ச் ஷீற் மற்றும் ஷொப்பிங் பைகளுக்கு, செப்டெம்பர் முதலாம் திகதி முதல் அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், ஆறு மாதங்களுக்குத் தேவையான பொருட்கள் கையிருப்பில் உள்ளன என்று பொலித்தீன் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
6 வாரங்களுக்கு முன்னதாகவே இந்த தடை அறிவிக்கப்பட்ட போதிலும், மாற்று முறைமைகள் மற்றும் திட்டங்கள் என்னவென்பது தொடர்பில் கைத்தொழிலாளர்களுக்கு இதுவரையிலும் அறிவுறுத்தப்படவில்லை என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், தடைவிதிப்பை ஆறு மாதங்களுக்கு கைவிடுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.நாளொன்றுக்கு 15 மில்லியன் லன்ஞ்ச் ஷீற்களும், 20 மில்லியன் ஷொப்பிங் பைகளும் தேவைப்படுகின்றன எனவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு!
இலங்கையிலும் 188 அதிகரித்தது கொரோனா நோயாளர் எண்ணிக்கை - மன்னாரில் முடக்கப்பட்டது தாராபுரம் கிராமம்!
ஏற்படவிருந்த பெரும் அழிவை கொரோனா தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்த முடிந்தது - உலகின் பல தலைவர்கள் முன்...
|
|