பொருளாதார மத்திய நிலையங்கள் மேலும் இரு தினங்களுக்கு திறக்கப்படும் – திறக்குமாறு இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவிப்பு!
Wednesday, August 25th, 2021
நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களையும் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம்திகதிகளில் மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக திறக்குமாறு இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
கொவிட் தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கால் பொருளாதார மத்திய நிலையங்களில் பெருமளவான மரக்கறிகள் தேங்கியிருந்தன.
இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு அமைய, நேற்றும், இன்றும் விசேட பொருளாதா மத்திய நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
இ.போ.ச. பேருந்துச் சாரதியைத் தாக்கினர் என - தனியார் பேருந்துச் சாரதி உட்பட மூன்று பேர் கைது !
இலங்கையிலும் நான்கு இலட்சத்தை கடந்தது தொற்றாளர் எண்ணிக்கை!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு கூறி எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
|
|
|


