பொருளாதார நெருக்கடி – உரிய நேரத்தில் சிகிச்சை பெறமுடியாமல் பல்வேறு நோய் நிலைமைகளுக்குள்ளாகி மனநல பிரச்சினைகள் அதிகரிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உயர்வு!

Monday, April 29th, 2024

பொருளாதார நெருக்கடி காரணமாக உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியாமல், பல்வேறு நோய் நிலைமைகளுக்கு ஆளாகி மனநல பிரச்சினைகள் அதிகரிப்பது போன்ற காரணங்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுகள் பிரிவின் சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்சிக்கா கணேபொல இதனைத் தெரிவித்துள்ளார்.

கறிப்பாக 2000 ஆம் ஆண்டில், நாட்டில் ஆண்டு சராசரி இறப்பு எண்ணிக்கை 140,000ஆக காணப்பட்டது. அந்த எண்ணிக்கை தற்போது, 180,000ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக பிறப்பு எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2020ஆம் ஆண்டளவில், நாட்டில் ஆண்டு பிறப்பு எண்ணிக்கை சுமார் 325,000ஆக காணப்பட்டது. இந்த நிலையில், அந்த தொகை தற்போது 280,000 வரை வீழ்ச்சிடைந்துள்ளது.

இதேவேளை, பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக பிரச்சினைகள் காரணமாக இளைஞர் யுவதிகள் விவாகரத்து செய்து கொள்ளும் நிலைமை அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிவில் பதிவுகள் பிரிவின் சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் சட்டத்தரணி லக்சிக்கா கணேபொல குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: