பொருளாதார நெருக்கடியில் இலங்கை – 30 இலட்சம் அமெரிக்க டொலர் நிவாரண நிதியை வழங்குகிறது ஜப்பான்!

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலையினை கவனத்திற்கு கொண்டு ஜப்பான் இலங்கைக்கு முப்பது இலட்சம் அமெரிக்க டொலர்களை அவசர நிவாரண நிதியாக வழங்கவுள்ளது.
இலங்கைக்கான ஜப்பான் தூதுவராலயம் இதுதொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இதேவேளை சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் எந்த ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்னர் இலங்கை மத்திய வங்கியின் சுதந்திரத் தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அமெரிக்க செனட் வெளியுறவுக் குழு வலியுறுத்தியுள்ளது.
தங்களது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்க செனட் வெளியுறவுக் குழு இதனைக் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் இலங்கையில் பலமான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் சட்ட அமுலாக்கம் என்பன தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
எரிபொருள் நெருக்கடி யை சமாளிக்க சில வாகனங்களின் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை!
2023 ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை - தனியார் வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் டிசம்பர்...
பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் வெளியானது தகவல்!
|
|