பொருளாதாரம் காப்பாற்றப்பட வேண்டுமாயின் மக்களின் கோபத்தை பெற்றுக்கொள்ள நேரிடும் – முன்னாள் ஜனாதிபதி ரணில்!
Thursday, September 26th, 2024
நாட்டின் பொருளாதாரம் காப்பாற்றப்பட வேண்டுமாயின் மக்களின் கோபத்தை பெற்றுக்கொள்ள நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்களை காப்பாற்ற முனைந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் முரண்பாடு ஏற்படும். சர்வதேச நாணய நிதியம் கோபப்பட்டால் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்றுவதே தனது முதன்மையான நோக்கம் என தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதே சர்வதேச நாணய நிதியத்தினால் கடுமையான நிபந்தனைகளை விதிப்பதன் நோக்கம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
000
Related posts:
இலங்கையின் பொருளாதாரத்தை அதிகரிக்க சுற்றுலாத்துறையை அதிகம் பயன்படுத்தலாம் - சுவிட்சர்லாந்து தூதுவர் ...
2024 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம...
இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் - அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவிற்குத...
|
|
|


