பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் இலங்கையின் முயற்சிக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் – அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, June 21st, 2022

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் கிளேர் ஓ நீலுக்கும், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு முதலீடுகளுக்கு திறந்த ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதில் இலங்கை அவதானம் செலுத்துவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் சுற்றுலாத் துறையை வலுப்படுத்தவும், இலங்கையில் அவுஸ்திரேலிய முதலீட்டை ஊக்குவிப்பதற்கும் ஆர்வமாக இருப்பதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தனது அரசாங்கத்தால் செயல்படுத்தப்படவுள்ள கப்பல் பாதை அபிவிருத்தி தொடர்பில் விளக்கியதுடன் கடல் பாதுகாப்பு மற்றும் ஆட்கடத்தல் தொடர்பான தமது அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பிலும் விளக்கினார்.

ஆட்கடத்தலை நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கமும் அதன் பாதுகாப்புப் படையினரும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுங்கத் திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கும் மேலும் அபிவிருத்தி செய்வதற்கும் இலங்கைக்கு உதவத் தயாராக இருப்பதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் அபிவிருத்தி உதவியை வழங்க முன்வந்தமைக்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு பிரதமர் இதன்போது நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: