பொருத்தமான நபர் வரும்வரை காத்திருங்கள் – அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபன தலைவரது ஓய்வு குறித்து ஜனாதிபதி கோட்டாபய அறிவுறுத்து!

பொருத்தமான நபர் ஒருவர் கிடைக்கும் வரை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேனவை மேலும் ஒரு மாதம் பதவியில் இருக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்பதாக வைத்தியர் குணசேன எழுத்துபூர்வமாக ஓய்வு பெறுவதற்கான தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். ஜனாதிபதியும் அவர் பதவியில் இருந்து விலக ஒப்புக்கொண்டார்.
எனினும், பொருத்தமான ஒரு மாற்று இடம் கிடைக்கும் வரை இன்னும் ஒரு மாதம் காத்திருக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் வைத்தியர் குணசேன இன்று காலை ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொவிட் பணிக்குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நுகர்வோர் அதிகார சபையின் வருமானம் அதிகம்!
பொதுத் தேர்தல்: இன்றுமுதல் வேட்புமனு கையேற்பு - தேர்தல்கள் ஆணைக்குழு!
இன்றுமுதல் நடைமுறைக்கு வந்தது சமூக பாதுகாப்பு உதவுத்தொகை வரி அறவீட்டுச் சட்டமூலம்!
|
|