பொது மக்கள் 1958 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் – இலங்கை போக்குவரத்து சபை தெரிவிப்பு!

Sunday, September 10th, 2023

இலங்கை போக்குவரத்து சபை தனது சேவைகளை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, பொது மக்கள் 1958 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி தமது முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், 0117 555 555 என்ற இலக்கத்திற்கும் அழைப்பினை மேற்கொண்டு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: