பொது மக்களுக்கு அதிகளவில் வரி நிவாரணம் வழங்கியது இந்த அரசாங்கமே – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டு!
Thursday, June 24th, 2021
நல்லாட்சி அரசாங்கத்தால் வரிச் சுமையிலிருந்த பொது மக்களுக்கு அதிக வரி நிவாரணம் வழங்கியது தற்போதைய அரசாங்சமே என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் முடிவில் 2014ஆம் ஆண்டில் வரி வருமானம் ரூ.1050 பில்லியன் ஆகும். அதன் பின் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் ஆண்டுக்கு ரூ.1700 பில்லியன் வருமானம் பெற்றது. இது அதிக சுமையாக இருந்தது.
புலிகளின் பயங்கரவாதம் நாட்டில் நிலவிய போதும் மக்களுக்கு இம்முறையில் வரி விதிக்கப்பட வில்லை. தற்போதைய கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்க வரியை 520 பில்லியன் ரூபாவால் குறைத்தது.
எனினும் இந்த அரசாங்கம் எதிர்பாராத தொற்றுநோயை எதிர்கொண்டது. எனவே முன்னைய நல்லாட்சி அரசாங்கத்தின் மோசமான நிதி முகாமைத்துவக் கொள்கையின் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தின் மேல் எதிர்பாராத செலவினங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என அமைச்சர் குணவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னைய ஆட்சியின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பொருளாதார வளர்ச்சி வீதம் வீழ்ச்சியடைந்தது. எனினும் கொவிட்-19 தொற்றுநோய் இந்த அரசாங்கத்தின் முன் அச்சவாலை பெரிதுபடுத்தியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


