கோப் குழு தொடர்பில் எந்தத் தகவல்களையும் வழங்கவில்லை – ரோசி!

Saturday, September 9th, 2017

கோப் எனப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த காலப்பகுதியில் எந்தவித தகவல்களையும் எந்தவொரு தரப்பினருக்கும் தாம் வழங்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்பிணை முறி விசாரணையின் போது தமது மகனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அதனை உறுதிப்படுத்துவதற்கான எந்த தரவுகளும் முன்வைக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தம்மீதும், தமது மகன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.சிறந்த அரசியலை முன்னெடுத்த தமக்கு இவ்வாறு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

ரோசி சேனாநாயக்கவின் மகன், கோப் குழு அறிக்கையில், அர்ஜுன் அலோசியசுக்கு ஏற்கனவே வழங்கியதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையிலேயே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Related posts: