பொது மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மோட்டார் சைக்கிள் அணி!
Thursday, May 27th, 2021
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் முகமாக நாடு பூராகவும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண குடாநாட்டில் பயணத்தடை கட்டுப்பாடுகளை மீறி வீதியில் பயணிப்போரை கண்காணிப்பதற்காக, யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் பெண் போலீசாரையும் உள்ளடக்கிய போலீஸ் மோட்டார் சைக்கிள் அணி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
யாழ்ப்பாண குடாநாட்டின் முக்கிய வீதிகளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் போலீஸ் மோட்டார் சைக்கிள் அணி பயணிப்போரை வழிமறித்து சோதனையில் ஈடுபடுவதோடு அத்தியாவசிய சேவை தவிர்ந்து பயணிப்போர் எச்சரிக்கை செய்யப்பட்டு வீடுகளுக்கு அனுப்பப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கட்டுப்பணம் குறித்த வர்த்தமானி அறிவிப்பு!
நடுக்கடலில் மாயமான மலேசிய விமானம் – எட்டு ஆண்டுகளின் பின் வெளியானது திடுக்கிடும் தகவல்!
தொற்றா நோய்களினாலேயே இலங்கையில் அதிக மரணங்கள் ஏற்படுகின்றன - வெளியான திடுக்கிடும் தகவல்!
|
|
|


