பொது மக்களின் அஞ்சலிக்காக முதல்வரின் உடல் இராஜாஜி அரங்கத்தில்!

நேற்றையதினம்( நேற்றையதினம்5) காலமான தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பொது மக்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டரை மாதங்கள் சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் இருந்த தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் நாள் இரவு 11. 30 மணிக்கு காலமானார்.
பின்னர், ஜெயலலிதாவுடைய பூதவுடல் மருத்துவமனையில் இருந்து போயஸ் தோட்டத்தில் இருக்கும் அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது.இந்நிலையில், டிசம்பர் 6-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் போயஸ் தோட்டத்திலிருந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு வரப்பட்டது.
ஜெயலலிதாவின் பூதவுடலின் மீது அதிமுக கட்சி கொடியும், அதற்கு மேலே இந்திய தேசிய மூவர்ண கொடியும் போர்த்தப்பட்டிருந்தது.ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டுள்ள இராஜாஜி அரங்கத்தில், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கூடியுள்ளனர்.
Related posts:
|
|