பொதுமக்கள் சூழ்நிலையை கருத்திற்கொள்ளாது செயற்பட்டால் பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!
Tuesday, May 25th, 2021
நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை சரியான முறையில் மேற்கொள்வதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் கொவிட் – 19 கட்டுப்படுத்தும் நிர்வாக குழு கூட்டத்தில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்திற் கொள்ளாது செயற்பட்டால் இவ்வாறு பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதில் எந்தவித அர்த்தமும் கிடையாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உயர் நீதிமன்ற நீதிபதிக்கு பதில் பிரதம நீதியரசர் பதவி!
விரைவில் பனைசார் டிப்ளோமா கற்கைநெறி!
இலகு ரயில் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக ஜப்பான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை -அமைச்சர் பிரசன்ன ...
|
|
|


