பொதுமக்களின் உணவுத் தேவைக்காக உணவுப் பொருட்களை விருப்பமின்றி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது – வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணாண்டோ சுட்டிக்காட்டு!

Wednesday, August 23rd, 2023

பொதுமக்களின் உணவுத் தேவைக்காக உணவுப் பொருட்களை விருப்பமில்லாமல் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

வர்த்தக அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்தவிடயத்தை தெரிவித்துள்ளார்.

விவசாயம் தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஒன்று தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தினூடாக வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கப்பெறும் சலுகைகள் போதியளவில் இல்லை. இந்தநிலையில் வாடிக்கையாளர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது.

இதன்காரணமாக வாடிக்கையாளர்களை கருத்திற் கொண்டு உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியநிலை ஏற்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இவ்வாறான பிரச்சினைகளுக்கு சம்மந்தப்பட்ட தரப்பினர் மற்றும் அமைச்சுக்கள் இணைந்து செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: