பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு !

Tuesday, March 3rd, 2020

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றுமுதல் பொதுத் தேர்தல் தொடர்பான தங்களது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு தேவையான சுற்றுநிரூபம் மற்றும் எழுத்து ஆவணங்களை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய மாவட்டங்களுக்கான தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படும் இடம் என்பன தொடர்பில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: