பொதுஜன பெரமுனவின் அரசியல் பயணத்தை முடக்க உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் மீண்டும் பொய் பிரசாரங்கள் – பஸில் ராஜபக்ச குற்றச்சாட்டு!
Thursday, September 14th, 2023
பொதுஜன பெரமுனவின் அரசியல் பயணத்தை முடக்கும் வகையில் உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் மீண்டும் பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகருமான பஸில் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்..
அதேவேளை, இவ்வாறான நடவடிக்கை மூலம் மொட்டு கட்சியை வீழ்த்த முடியாது எனவும் மொட்டு கட்சியோ அல்லது ராஜபக்சக்களோ குண்டு தாக்குதல்களை நடத்தி ஆட்சியை பிடிக்கவில்லை.
மக்கள் ஆசியுடன்தான் ஆட்சிக்கு வந்தோம். மக்கள் எமக்கு வழங்கிய ஆணை இன்னும் இழக்கப்படவில்லை. அடுத்து தேர்தலொன்று நடைபெற்றால் மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை தெரியவரும் எனவும் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அறுவை சிகிச்சைக்கு பின் முதல் போட்டியில் களமிறங்கிய சந்திமால்!
எந்தவொரு அரச சொத்தையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அரசாங்கம் விற்பனை செய்யாது - இராஜாங்க அமைச்சர் ச...
2023 ஆம் ஆண்டு நாட்டில் புதிய மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த வல...
|
|
|


