பொதுச் சேவையை வினைத்திறனாக்குவதற்காக அதிகாரிகளுக்கு தனிப்பட்ட பாவனைக்காக வழங்கப்பட்ட தொலைபேசிகளில் 49% செயலிழப்பு!
Tuesday, February 27th, 2024
பொதுச் சேவையை மேலும் வினைத்திறனாக்குவதற்காக அரசாங்க அதிகாரிகளுக்கு தனிப்பட்ட பாவனைக்காக வழங்கப்பட்ட தொலைபேசிகளில் 49% செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரக் கற்கைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறித்த விடயம் தெரியவந்துள்ளது.
கிராம உத்தியோகத்தர்கள்முதல் சமூர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வரை இந்த நிலைமை காணப்படுவதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 589 அரச அதிகாரிகளின் மாதிரியைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 22% அதிகாரிகள் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பதில்லை என்பது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நிதி பற்றாக்குறையில் ஐ.நா - ஐ.நா தலைவர் அண்டோனியோ குட்ரஸ் !
அடுத்தவாரம் மேலும் 40 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கைக்கு - பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் தெரி...
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்குமாறு அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் கோரிக்கை!
|
|
|
அபாய மட்டத்தை எட்டியது இரணைமடு குளம் - அனைத்து வான் கதவுகளும் திறக்கப்படுள்ளதாக தாழ்நில பகுதி மக்களி...
அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடி - மாகாண சபைகளின் உயர் அதிகாரிகள் பணத்தை விரயம...
நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு - இறக்குமதி செய்யப்படும் சிமெந்துக்கு விதிக்கப்படும...


