பேஸ்புக் செயலி செயலிழப்பு – கவலை வெளியிட்டுள்ள பேஸ்புக் நிறுவனம்!
Friday, March 15th, 2019
உலகம் முழுவதும் பேஸ்புக் பாவனை பாதிக்கப்பட்டமைக்கு அந்த நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளதாக தனது உத்தியோகபூர்வ கணக்கில் பதிவொன்றை தரவேற்றியுள்ளது.
இது இணைய வழி தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு அல்லவென்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விரைவில் அதன் தொழிற்பாடுகளை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், பேஸ்புக் பாவனை பாதிக்கப்பட்டமைக்கான காரணத்தை அந்த நிறுவனம் இதுவரை விளக்கவில்லை.
2008 ஆம் ஆண்டு இது போன்ற ஒரு பாதிப்பை பேஸ்புக் சந்தித்திருந்தது.
இதுவரை உலகளாவிய ரீதியாக 2.3 பில்லியன் பாவனையாளர்கள் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றமை குறிப்பிடதக்கது.
Related posts:
பாடசாலை மாணவர்களுக்கான பயணக் கட்டணத்தை அதிகரிக்க முயற்சி!
நாடாளுமன்றுக்கு ஜனாதிபதி இரகசியமாக வரவில்லை - பதவியும் விலக மாட்டார் - இராஜாங்க அமைச்சரான காஞ்சன விஜ...
இன்று அதிகாலை வெல்லவாய பகுதியில் மற்றுமொரு நில அதிர்வு - குறித்த பகுதியில் இதுவரை 3 நில அதிர்வுகள் ப...
|
|
|


