பேலியகொடையை உலுக்கிய தீ விபத்து!

Monday, July 16th, 2018

பேலியகொடை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏழு வீடுகள் முற்றாக எரிந்துள்ளன.

பேலியகொடை நுகே வீதியில் அமைந்துள்ள வீடுகளே மின் ஒழுக்கு காரணமாக தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தினால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். அத்துடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: