பேருந்து வீதியில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்த பொலிஸார் எடுத்த முடிவு தவறானது – தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தயார் – கெமுனு விஜயவர்தன!

Wednesday, September 16th, 2020

கொழும்பு பகுதியில் செயற்பட்டு வரும் புதிய பாதை அமைப்பு தொடர்பாக தாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் பேருந்து வீதியில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்த பொலிஸார் எடுத்த முடிவு  தவறானது என தனியார் போக்குவரத்து சங்கத் தலைவர் கெ முனு விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த தீர்மானத்தை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை என்றால் அனைத்து தனியார் வாகனங்களும் நிறுத்தப்பட்டு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர்  தெரிவித்துள்ளார்

அத்துடன் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பஸ் பாதைகளில் செல்வது சட்டவிரோதமானது என்றும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் புதிய முறையின் காரணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் விபத்துக்களில் சிக்கும் அபாயம் இருப்பதாகவும், இதுபோன்ற விபத்து ஏற்பட்டால், அதற்கு பொலிஸாரே பொறுப்பேற்க வேண்டும் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்

இருவழி  பாதைகள் மட்டுமே உள்ள வீதிகளில் சட்டத்தை அமுல்படுத்துவது நடைமுறையில்லை எனவும் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிபபிடத்தக்கது.

Related posts: