பேருந்து, ரயில் பயணிகளை சிவில் உடையில் பொலிஸார் கண்காணிப்பு!

Sunday, December 20th, 2020

போக்குவரத்துச் சேவைகளில் இன்றுமுதல் சிவில் உடையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோகன தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பொது பொக்குவரத்து சேவைகளான பேருந்து மற்றும் ரயில்களில் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட்டு பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதனை கண்காணிக்க பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்படவுள்ளன.

வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளதால் சிவில் உடைகளில் பேரூந்துகளில் ஏறும் பொலிஸார் சாரதிகளின் நடத்தைகளை ஆராய்வதோடு பயணிகள் முகக் கவசம் அணிந்துள்ளார்களா என்பதையும் கண்காணிப்பார்கள், என்றார்

Related posts: