பேருந்து முன்னுரிமை வீதிகளில் குறித்த வாகங்களை தவிர்ந்த வேறு வாகனங்களை செலுத்த முடியாது – சாரதிகளுக்கு பொலிஸார் அறிவிப்பு!

Wednesday, September 23rd, 2020

இன்றுமுதல் பேருந்து முன்னுரிமை ஒழுங்கையில், பேருந்துகள், அலுவலக சேவை வாகனங்கள் மற்றும் பாடசாலை சேவை வாகனங்கள் மாத்திரம் பயணிக்க முடியும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோது, காவல்துறை ஊடகப் பேச்சாளர் காவல்துறை அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் பேருந்து முன்னுரிமை வீதிகளில் குறித்த வாகங்களை தவிர்ந்த வேறு வாகனங்களை செலுத்த முடியாது. உந்துருளிகள் மற்றும் முச்சக்கரவண்டிகள் வீதியின் இரண்டாவது ஒழுங்கையில் பயணிக்க வேண்டும்.

கொழும்பையும், அதனை அண்மித்த நகரங்களிலும், பிரதான 4 வீதிகளை மையமாக கொண்டு, காலை 6 மணி காலை 9 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும், இந்த வீதி ஒழுங்கை சட்டம் கடந்த 14 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

ஹைலெவல் வீதியில் நுகேகொடை – அநுலா வித்தியாலயத்திற்கு அருகில் இருந்து பித்தலை சந்தி வரையும், பேஸ்லையின் வீதியில் களனி பாலம் முதல் ஹைலெவல் பேஸ்லையின் சந்தி வரையும், காலி வீதியில் வெள்ளவத்தை முதல் லிபர்ட்டி சுற்றுவட்டம் வரையிலும் வீதி ஒழுங்கை சட்டம் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே இரணைதீவில் கொவிட் சரீரங்களை அடக்கம் செய்ய தீர்மானம் - சுகாதார சே...
40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிய கப்பல் நாளை இலங்கை வந்தடையும் - எரிசக்தி அமைச்சின் செயலாளர் அறிவிப...
வாகன பதிவு மென்பொருளின் பிரதியை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர...