பேருந்தின் மிதிபலகையில் இருந்து இறங்க முற்பட்ட இளைஞன் தவறி விழுந்து உயிரிழப்பு!

யாழில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து யாழ். நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக இன்று (23.2.2024) காலை இடம்பெற்றது.
விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
பருத்தித்துறையிலிருந்து யாழ் நோக்கி பயணித்த பேருந்தில் சென்ற குறித்த இளைஞன் கீழே விழுந்த நிலையில் பேருந்தின் சில்லுக்குள் நசியுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையத்தில் பணியாற்றும் முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உள்ளூராட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் - மஹிந்த தேசப்பிரிய!
சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார் புதிய தூதுவர்!
அரச மற்றும் தனியார் நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவது குறித்து கவனம்!
|
|