பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் நீதிப்பேராணை மனு மீதான ஆராய்வு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு!

Friday, March 5th, 2021

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் காலப்பகுதியில் நாட்டிற்கு 6000 வாள்கள் கொண்டு வரப்பட்ட சம்பவம் தொடர்பில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த நீதிப்பேராணை மனு மீதான ஆராய்வு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்றையதினம் மேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளர் அர்ஜூன ஒபேசேகர மற்றும் மாயாதுன்னே கொரயா ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் நிலைமைகள் தொடர்பில்  பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபரிடம் வினவி நீதிமன்றில் சமர்பணங்களை முன்வைக்க அனுமதியளிக்குமாறு சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சிரேஷ்ட சட்டத்தரணி அவந்தி பெரேரா இதன்போது கோரியிருந்தார். இந்நிலையில் மனுமீதான ஆராய்வு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

மக்கள் பணத்தை ஏப்பமிடுகிறது மாநகர சபைக்கான புதிய கட்டட அடிக்கல் நாட்டும் நிகழ்வும் “என்ரபிரைஸ் ஶ்ரீ...
அரிசிக்கான விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு – அமைச்சர் பந்துல குணவர்த்தன!
சட்டவிரோதமாக கனடா செல்லமுயன்று மீட்கப்பட்ட இலங்கையர்கள் 152 பேர் வியட்நாமிலிருந்து இலங்கைக்கு அழைத்த...