பேச்சுவார்த்தை வெற்றி! -சுங்கத்திணைக்கள சம்மேளனம்!
 Wednesday, September 28th, 2016
        
                    Wednesday, September 28th, 2016
            
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும், சுங்கத்திணைக்கள தொழிற்சங்க சம்மேளன பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தை நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், சந்திப்பின்போது தமது கோரிக்கைகளுக்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, இணக்கம் வெளியிட்டதாக சுங்கத்திணைக்கள சம்மேளனம் தெரிவித்துள்ளது.
உத்தேச சுங்க விதிமுறை சட்டத்திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சுங்கத்திணைக்கள தொழிற்சங்கத்தினர் கடந்த பல நாட்களாக போராட்டங்களை நடத்தியுள்ளனர்.எனினும் கடந்த திங்கட்கிழமையன்று அவர்கள் அந்தப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்.
இந்த நிலையிலேயே நேற்றைய சந்திப்பும் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே சுங்க சட்டத்தின் கீழ் பல விடயங்கள் புதிய சட்டத்தில் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் சுங்கத்திணைக்கள தொழிற்சங்கத்தினர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        