பெல்ஜியம் சென்றார் பிரதமர்!

Sunday, October 16th, 2016

உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை பெல்ஜியத்திற்கு சென்றுள்ளார்

குறித்த விஜயத்தின் போது பெல்ஜியம் பிரதமர் சார்ள்ஸ் மிச்செல் மற்றும் லோரன்ட் இளவரசருடன் பேச்சு வார்த்தையினை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஜி எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீளப்பெற்றுக் கொள்ளும் முகமாக பிரதமர் இவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் குறித்த விஜயத்தில் அமைச்சர் சாகல ரத்நாயக்க உட்பட பிரதமரின் செயலாளர் சமன் ரத்நாயக்க, மற்றும் மேலதிகச் செயலாளர் சமன் அதாவுடஹெட்டி, பிரதமரின் விஷேட உதவியாளர் சென்றோ பெரேரா ஆகியோரும் பங்குபற்றவுள்ளனர்.மேலும் இந்த விஜயத்தை முடித்துக் கொண்ட பின்னர், அவர் ஹொங்கொங்கிற்கும் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதங்களில் பிரதமர் வெளிநாடுகளுக்கு நாட்டின் பொருளாதாரம் தொடர்பிலேயே அதிகமான விஜயத்தினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Ranil-Wickremesinghe

Related posts: