பெற்றோல் விலைகளை ஒக்டோபர் முதல் அதிகரிக்கும் – ஐ.ஓ.சி!

ஒக்டோபர் முதல் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஐ.ஓ.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கப்படவுள்ள விலை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என தெரிவித்த நிர்வாக இயக்குனர் ஷியாம் போரா எரிபொருள் தொடர்பில் வரி குறைப்போ அல்லது விலை அதிகரிப்போ மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக சந்தையில் தற்போதைய விலைக்கு அமைவாக எரிபொருள் விநியோகத்தின் போது தமக்கு பாரிய நட்டம் ஏற்படுவதாக இலங்கை ஐ.ஓ.சி. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷியாம் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
வாகன வருமான வரியை இணையத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்!
35 ஆயிரம் கிலோ பனம் வெல்லத்தை 2018 இல் உற்பத்தி செய்ய நடவடிக்கை!
யாழ்ப்பாணத்தில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் – பொதுமக்களுக்கு மாவட்ட செயலகம் எச்சரிக்கை!
|
|