பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஏகபோகத்திற்கு முற்றுப்புள்ளி – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Thursday, October 20th, 2022
பெற்றோலியப் பொருட்கள் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் சர்வதேச விநியோகஸ்தர்கள் நாட்டின் எரிசக்தி துறையை அணுக முடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதனூடாக பெற்றோலியக் கூட்டுத்தாபன ஏகபோகம் இல்லாதொழிக்கப்படும் என்றும், விமான எரிபொருள் உள்ளிட்ட துறைகளில் புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சட்டத் தடைகள் நீக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
பேருந்து போக்குவரத்து அட்டவணையில் மாற்றம்?
முதல் தடவையாக நாளொன்றில் 200 க்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் பதிவு - மொத்த எண்ணிக்கையும் 8 ஆயிரத்தைக...
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவு இடைநிறுத்தம் - அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடைக்கால நிர்வாக குழு ந...
|
|
|


