பெறுமதி சேர் வரி அதிப்பு – மின்சார கட்டணம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பாதிப்பு ஏற்படாது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
Friday, November 17th, 2023
பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படுகின்ற போதிலும் மின்சார கட்டணம் மற்றும் பல்வேறு துறைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், உலக வங்கியின் உடன்படிக்கைக்கு அமைய அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படுகின்ற போதிலும் அது தற்காலிகமான நடவடிக்கையே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், வரி வலையமைப்பை விரிப்படுத்தியதன் பின்னர் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாடு திரும்பும் ஈழ அகதிகளுக்கு இலவச விமான பயணச் சீட்டுக்கள்!
கோடாரிக்கல்லுக்குளம் உடைப்பு: 142 ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு!
|
|
|


