பெரும்போகத்திற்கான சேதன உர விநியோகம் இன்றுமுதல் ஆரம்பம் – விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!
Wednesday, October 13th, 2021
நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்குப் பெரும்போகத்திற்கான சேதன உர விநியோகம் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, அம்பாறை, அனுராதபுரம், பொலன்னறுவை, மொனராகலை, திருகோணமலை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை, குருநாகல் மற்றும் புத்தளம் முதலான மாவட்டங்களுக்கு, சேதன உர விநியோகத்தில் முன்னுரிமை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இடப்பெயர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் உடன் பதிவுகளை மேற்கொள்ளுங்கள் - தெல்லிப்பழை பிரதேச செயலர்!
அர்ஜூன் மஹேந்திரன் விவகாரம் : ஆவணங்கள் சிங்கப்பூரிற்கு!
நியாயாதிக்க நிறுவனங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் நிர்வாக சபைக் கூட்டங்கள் இடைநிறுத்தப்படவுள்ளத...
|
|
|


