பெருமளவிலான ஊழியர்கள் அரசியல் நியமனங்களின் அடிப்படையில் சேவையில் இணைந்துள்ளனர் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டு!

தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையில் உள்ள பெருமளவிலான ஊழியர்கள் அரசியல் நியமனங்களின் அடிப்படையில் சேவையில் இணைந்தவர்கள் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், சுமார் 70 விகிதமான ஊழியர்கள் திறமையற்றவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பல துறைகளில் ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் இருந்தாலும் சில துறைகளில் ஊழியர்கள் அதிகளவில் இருப்பதாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
ஆகவே புதிதாக ஊழியர்களை நியமிக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுற்றுலா வழிகாட்டிகளுடன் கூட்டிணைந்த ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த யோசனை!
ரணில் விக்ரமசிங்க ஜப்பானுக்கு பயணம் - ஜப்பானிய அரச தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தவும் எதிர்பார்ப்பு!
மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பில் உதய கம்மன்பில தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது - சபாநாயகர் த...
|
|