பெரிய வெள்ளி இன்று – கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு!
Friday, April 15th, 2022
உலக வாழ் கிறிஸ்த்தவ மக்கள் இன்றையதினம் பெரிய வெள்ளி தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.
இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.
கிறிஸ்த்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும்.
இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூருகின்ற இந்தவிழாவின்போது கிறிஸ்த்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
அதற்கமைய, இலங்கையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாட்டின் சீரற்ற காலநிலை: 9 ஆயிரத்து 815 குடும்பங்கள் பாதிப்பு - 8 பேர் பலி!
தாக்குதல் தொடர்பான தெரிவுக்குழுவில் பொலிஸ் உயரதிகாரிகள் நால்வர் முன்னிலை!
ஈ.பி.டி.பி உறுப்பினர் சுமன் நடவடிக்கை -நவிண்டில் பொதுச் சந்தைக்கு திண்மக் கழிவுக் கூடைகள் வழங்கிவைப்...
|
|
|


