பெண் பிரதிநிதித்துவம் புறக்கணிக்கப்பட்டால் கடும் விளைவை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் –  எச்சரிக்கிறது மார்ச் 12 அமைப்பு !

Friday, February 23rd, 2018

உள்ளூராட்சி சபைகளில் 25 சதவீதப் பெண் பிரதிநிதித்துவத்தைப் புறந்தள்ளிச் செயற்பட முற்பட்டால் கடுமையான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும். இவ்வாறு மார்ச் 12 அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மார்ச் 12 அமைப்பின் பேச்சாளர் மஞ்சுல கஜநாயக்க மேலும் தெரிவித்ததாவது:

இந்தத் தேர்தலின் பிரதான அம்சம் பெண்களுக்கான அரசியல் உரிமையைப் பெற்றுக் கொடுத்தலாகும். 25 வீத பெண் பிரதிநிதிகள் உள்@ராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்படுதல் கட்டாயப்படுத்தப்பட்டது. ஆனால் பெண் பிரதிநிதிகள் தொடர்பில் கவனம் செலுத்துவதில் கட்சிகள் தவறிழைத்துள்ளன. சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் கொடுத்தல் மட்டுமன்றி உள்ளூராட்சிமன்றத் தலைமைத்துவத்தை ஏற்கும் உரிமைகளும் பெண் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் சகல கட்சிகளும் கவனத்தைச் செலுத்துதல் வேண்டும் என்றார்.

இந்த ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்ட பவ்ரல் அமைப்பின் தலைவர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்ததாவது:

மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகியவற்றுக்கான விகிதாசாரப் பட்டியல் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் போது பொறுப்பு வாய்ந்த மக்களுக்கு சேவையாற்றக்கூடிய உறுப்பினர்களை தெரிவு செய்வதில் கட்சிகள் அனைத்தும் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

Related posts: