பூநகரியில் சூரிய மின்சக்தி திட்டத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம்!
Tuesday, December 12th, 2023
கிளிநொச்சி – பூநகரி குளத்தின் மேற்பரப்பில் சூரிய மின்சக்தி திட்டத்தை நிறுவுவதற்காக அவுஸ்திரேலியாவுடன் மின் கொள்முதல் ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது எக்ஸ் தளத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்
இதன்படி ஆயிரத்து 500 மெகாவோட் ஆற்றல் சேமிப்பு அமைப்புடனான 700 மெகாவோட் சூரிய மின்சக்தி திட்டத்தில் முதலீடு செய்வதற்காக அவுஸ்திரேலியாவின் யுனைடெட் சோலார் குழுமத்துடன் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
ஆயிரத்து 727 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் இந்த சூரிய மின்சக்தி திட்டம் நிறுவப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கை - இந்திய இடையேயான உறவுப்பாலம் வலுவடைந்துள்ளது - யாழ். இந்தியத் துணைத் தூதுவர் நடராஜன்!
எலிக் காய்ச்சலால் கிளிநொச்சியில் ஒருவா் பலி !
அரசியல் நோக்கம் கொண்ட குழுக்கள் தடுப்பூசி செலுத்தப்படும் நடவடிக்கைகளை குழப்புவதற்கு முயற்சி - சுகாதா...
|
|
|


