புளியங்குளம் முத்துமாரிநகர் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு – முதற்கட்டமாக 135 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டதாக ஈ.பிடி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!
Wednesday, September 29th, 2021
வவுனியா புளியங்குளம் முத்துமாரிநகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான, வயல்காணி பிரச்சினைக்கு முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்..
குறித்த பகுதிக்கு வவுனியா வடக்கு பிரதேச செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் வனவள திணைக்கள அதிகாரிகள் ஆகியோருடன் நேரில் சென்று பார்வையிடப்பட்டு பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பகுதி வனவள திணைக்களத்திற்கு உரிய பகுதியாக காணப்பட்டாலும், இக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அதை விடுவிக்குமாறு துறைசார் தரப்பினரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் கோரியிருந்தார்.
இந்நிலையில் சுமார் 135 ஏக்கர் காணியினை முதற்கட்டமாக விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் அப்பகுதியில் நடைபெறும் சில சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்த துரிதகதியில் நடவடிக்கை எடுக்குமாறும் பொலிசாருக்கு நாடாளுமன்ற உறுப்பினரும் குறித்த மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான திலீபன் பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


