புலிகள் அமைப்புக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் தடை: – இந்திய மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

Wednesday, May 15th, 2024

பயங்கரவாதிகள் என்ற வரையறையின் கீழ் புலிகள் இயக்கத்தை இந்திய மத்திய அரசு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை இந்திய மத்திய அரசு தடை செய்தது. இத் தடை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்தியத் தேசிய பாதுகாப்புக் கருதி விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு 1992 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி இந்தியாவில் முதன் முதலில் தடை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: