புறப்பட்டு 3 மணித்தியாலங்களில் மீண்டும் கட்டுநாயக்கா திரும்பிய விமானம்!

இலண்டன் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பயணிகள் அன்றைய தினம் மாலை மற்றுமொரு விமானத்தின் மூலம் பயணத்தை தொடர்ந்ததாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பேச்சாளர் டீபால் பெரேரா தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை 1.30 மணியளவில் பயணத்தை ஆரம்பித்த விமானம் 3 மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து மேலும் ஒரு மணித்தியாலங்களின் பின்னர் மற்றைய விமானம் தனது பயணத்தை ஆரம்பித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
புதிய தொலைப்பேசிக் கட்டண விபரம் வெளியானது!
வெள்ளவத்தை கடலில் கரை ஒதுங்கிய உயிரினம்!
தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - கல்வி இராஜாங்க அமைச்சர் தெ...
|
|