புத்தாண்டுமுதல் அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் -ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
Monday, March 11th, 2024
தமிழ் – சிங்கள புத்தாண்டுமுதல் அரச ஊழியர்களின் சம்பளத்தில் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குளியாப்பிட்டிய மாநகர சபை மைதானத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அஸ்வெசும திட்டத்தின் கீழ் சமுர்தியை விட மூன்று மடங்கு நன்மைகள் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் 24 இலட்சம் பேருக்கு அந்த நன்மைகள் கிடைக்கும்.
அதனடிப்படையில் எதிர்வரும் சிங்கள – தமிழ் புத்தாண்டில் அந்த அனைத்து குடும்பங்களுக்கும் 20 கிலோ அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பெற்றோலின் விலை 5 ரூபாவால் உயர்வு - லங்கா ஐ.ஓ.சீ நிறுவனம்!
தமிழரசுக் கட்சியின் காடையர்களால் வேலணை வங்களவடியில் கொலைவெறித் தாக்குதல் – இரு இளைஞர் ஆபத்தான நிலையி...
மஞ்சள் காமாலை நோய்க்கான 2 ஆயிரம் தடுப்பூசிகள் அடுத்தவாரம் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் - பிரதி சுகாதா...
|
|
|


