புத்தாண்டுக் காலத்தில் மக்களுக்கு சலுகைகளை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் இந்தியாவிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
Saturday, April 2nd, 2022
இந்தியாவிலிருந்து மேலதிக கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் முதல் இருப்பு அடுத்த வாரம் வரும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நாடு, சம்பா மற்றும் வெள்ளைப் பச்சை அரிசி உள்ளிட்ட 40,000 மெட்ரிக்தொன் அரிசி சலுகை விலையில் விநியோகிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் புத்தாண்டுக் காலத்தில் மக்களுக்கு சலுகைகளை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என வர்த்தக அமைச்சரான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
வியாபாரிகள் பண்டிகைக் காலத்தில் அரிசியின் விலையை செயற்கையாக உயர்த்தி சந்தையில் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவார்கள் என நம்புவதாகவும், சலுகை அரிசி விநியோகத்தின் மூலம் இந்த நிலைமையை எதிர்த்துப் போராட முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் முறையான முறையில் அரிசியை இறக்குமதி செய்து விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


