புதிய வீடமைப்பு கடன் திட்டம் நடைமுறைக்கு – நிதியமைச்சர்!
Friday, May 24th, 2019
அடுத்தவாரம் முதல் ஸ்வீட் ஹோம் என்ற புதிய வீடமைப்பு கடன் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.
புதிதாக திருமணமான இளம் தம்பதியினருக்கு வீடொன்றை பெற்றுக் கொள்வதற்காக ஸ்வீட் ஹோம் வீடமைப்பு கடன் திட்டம் வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில் குறித்த புதிய கடன் திட்டமானது அடுத்தவாரம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் குறைந்தது 6.75 சதவீத வட்டிக்கு ஆக கூடிய தொகையாக 10 மில்லியன் ரூபாவை கடனாக பெற்று கொள்ள முடியும் என்பதுடன், இதனை இளம் தம்பதியினர் 25 வருடங்களில் திருப்பி செலுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வடமாகாணப் பிரதம செயலரை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் - மல்லாகம் மாவட்ட நீதவான் உத்தரவு
இலங்கையில் புதிய வகை உரங்களை அறிமுகப்படுத்த நனோ தொழில்நுட்ப நிறுவனம் தயார் - நனோ தொழில்நுட்ப நிறுவனம...
வைத்தியர்கள் பயணம் செய்த சொகுசு வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வீட்டு மதிலுடன் மோதி விபத்து!
|
|
|


