புதிய வாகன சட்டங்கள்: காப்புறுதி பெறுவதில் சிக்கல்!

Monday, October 30th, 2017

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வாகன சட்டங்கள் காரணமாக காப்புறுதி இழப்பீடுகளை பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்படலாம் என்று கவலை தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் தற்போதைக்கு சுமார் நாற்பது இலட்சம் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.காப்புறுதி நிறுவனங்களின் போட்டி காரணமாக வாகனம் ஒன்று விபத்தில் சிக்கினால் அதன் புகைப்படங்களை மட்டுமே காண்பித்து காப்புறுதி இழப்பீட்டை பெற்றுக் கொள்ளும் அளவுக்கு சட்டதிட்டங்கள் இலகுவாக்கப்பட்டுள்ளன.

எனினும், புதிய வாகன சட்டங்களின் பிரகாரம் விபத்தொன்றின் போது பொலிஸாருக்கு கட்டாயம் அறிவித்தாக வேண்டும். அவ்வாறு அறிவிக்காமல் இருந்தால் அதற்கான தண்டப்பணமாக 3 ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரம் ரூபா வரை அறவிடப்படும். வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகும் போது அதனை பொலிஸாருக்கு அறிவிப்பதுடன் வாகனத்தில் இருந்த அனைவரின் விபரங்களையும் தவறாது பொலிஸார் வழங்கும் படிவத்தில் குறிப்பிட வேண்டும். அதன் பின்னரே காப்புறுதிக்கான சிபாரிசு வழங்கப்படும்.அத்துடன் வாகனக் காப்புறுதி மூலமான இழப்பீட்டைப் பெறுவதற்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அனுமதி மறுத்தால் குறித்த இழப்பீட்டைப் பெற முடியாத வகையில் புதிய சரத்துகள் உள்வாங்கப்பட்டுள்ளன.இவ்வாறான நிலை காரணமாக எதிர்வரும் காலங்களில் வாகனக் காப்புறுதி இழப்பீடுகளைப் பெறுவதில் பெரும் சிக்கல்கள் ஏற்படலாம் என்று கூறப்படுகின்றது.

Related posts:


வைரஸ் தொற்றுக்கான சாதாரண அறிகுறிகள் தென்படும்போது அவற்றை உதாசீனம் செய்ய வேண்டாம் - பிரதி சுகாதார சேவ...
அரச வைத்தியசாலைகளினால் விநியோகிக்கப்படும் மருந்துசீட்டுகளுக்கு ஒசுசல ஊடாக இலவச மருந்து விநியோகம்!
நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைவோம் - தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் நேரில் அழைப்பு விடுத்தார் ஜன...