புதிய பேருந்துக் கட்டண விவரம் வெளியானது!

Thursday, May 17th, 2018

எரிபொருள் விலையேற்றத்தையடுத்துப் பேருந்துக் கட்டணங்களை 6.56 சதவீதத்தால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. அதற்கு அமைவாக புதிய கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டன. குறைந்தபட்ச 10 ரூபா பேருந்துக் கட்டணத்தில் அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை. அதற்கு மேலதிகமான தொகை முதல் 305 ரூபா வரையுள்ள கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டது.

அதிக பட்ச கட்டணமாக 733 ரூபா கட்டணம் 781 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.

13,17 மற்றும் 21 ரூபாக்களாக இருந்த கட்டணங்கள் ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் 25 ரூபா முதல் 34 ரூபா மற்றும் 38 ரூபாவாக இருந்த கட்டணங்களில் இரண்டு ரூபா அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கூறியுள்ளது.

35 ரூபா, 40 ரூபா, 45 ரூபா, 48 ரூபா, 53 ரூபா, 55 ரூபா, 60 ரூபாவாக இருந்து வந்த பேருந்துக் கட்டணங்கள் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டன.

42 ரூபா, 57 ரூபா, 62 ரூபா, 64 ரூபா, 67 ரூபாவாக இருந்து வந்த பேருந்துக் கட்டணங்கள் 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை 69 ரூபா, 71 ரூபா, 76 ரூபா, 81 ரூபா, 86 ரூபா வரையான கட்டணங்களுக்கு 5 ரூபா அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் 73 ரூபா, 78 ரூபா, 83 ரூபாவாக இருந்த கட்டணங்கள் 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Related posts: