புதிய தண்டப் பணமொன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

தனியார் பேருந்துகளில் தூர இடங்களுக்குப் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கும் புதிய தண்டப் பணமொன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகதேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கிணங்க, பயணச் சீட்டு இல்லாத பயணிகளிடம் 1000 ரூபா தண்டப் பணமும்,பிரயாணச் சீட்டுத் தொகையை இரு மடங்காகவும் அறவிடப்படவுள்ளது. இது தொடர்பான சட்டம் ஆணைக்குழுவில் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுத்தலைவர் எம்.ஏ.பீ. ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
இதேவேளை,அண்மையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பயணச்சீட்டு இன்றி பயணிக்கும் பயணிகளுக்கான தண்டப் பணம் 1000 ரூபாவாக அதிகரிக்கஅரசாங்கம் தீர்மானித்திருந்தது.
இருப்பினும்,தனியார் பஸ்களில் இந்த சட்டம் இருக்கவில்லை ஆனால் தற்பொழுதுதனியார் பஸ்களுக்கும் இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளமைகுறிப்பிடத்தக்கது.எனவே பஸ்களில் பயணிக்கும் பொது மக்கள் பயணச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ளுமாறுதேசிய போக்குவரத்து ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Related posts:
|
|