புதிய கல்வி ஆண்டு வரையில் ஆசிரிய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Saturday, September 3rd, 2022
2023 புதிய கல்வி ஆண்டு வரையில் ஆசிரிய இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு, வைத்திய அறிக்கையில் உறுதிப்படும் சுகாதார காரணங்களின் அடிப்படையில் வழங்கப்படும் பாடசாலைகளின் சேவை அவசிய தன்மையை அடிப்படையாக கொண்ட ஆசிரிய இடமாற்றங்களை பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து பிரச்சினை காரணமாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக இணைப்பு கடந்த 31 ஆம் திகதியுடன் முடிவுறுத்தப்படவிருந்தது.
இந்தநிலையில் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களது இணக்கப்பாடு இருந்தால் மாத்திரமே, ஆசிரியர்கள் குறித்த பாடசாலைகளில் எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை சேவையில் ஈடுபட முடியும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சுகாதார அமைச்சுக்குள் பிரவேசித்து கலகம் விளைவித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது - அமைச்சர் ராஜித்த சேனாரட...
பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் முடியவில்லை - இராணுவ தளபதி!
எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டாம் - நுகர்வோர்களிடம் லிட்ரோ நிறுவனத்தின் த...
|
|
|


