புதிய கல்வியாண்டுக்கான பாடப் புத்தக கொள்வனவு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, January 25th, 2023

புதிய பாடசாலை (2023) தவணைக்காக மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்களை வழங்குவது தொடர்பான கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

45% பாடப்புத்தகங்கள் அரச அச்சகங்களிலும், 55 வீதமானவை தனியார் அச்சகங்களிலும் அச்சிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க,தகுதிவாய்ந்த 22 தனியார் அச்சக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்திய கடன் உதவியின் கீழ் பெறப்பட்ட காகிதத்தின் முதல்

கையிருப்பையும் அரச அச்சகங்கள் பெற்றுள்ளதையடுத்து, பாடநூல் அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாடநூல் அச்சிடும் பணியில் தனியார் அச்சக நிறுவனங்களுக்கு ஒப்பந்தத் தொகையில் 20 சதவீதத்தை முற்பணமாக வழங்க அமைச்சரவையின் ஒப்புதலை கல்வி அமைச்சர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: