புதிதாக நியமனம் பெற்றிருக்கும் இலங்கைக்கான தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகரின் நற்சான்றுப் பத்திரங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு!
Tuesday, March 12th, 2024
இலங்கைக்கு புதிதாக நியனம் பெற்று வந்திருக்கும் தூதுவர் ஒருவரும் உயர்ஸ்தானிகரும் கொழும்பு கோட்டை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (12) நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.
தாய்லாந்தின் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமனம் பெற்றிருக்கும் பைட்டூன் மஹாபன்னபோர்ன் (H. E. Paitoon Mahapannaporn), பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகர் நியமனம் பெற்றிருக்கும் மேஜர் ஜெனரல் (H.E. Major General (R) Faheem Ul Aziz, HI (M)), ஆகியோரே இவ்வாறு நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தார்.
வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் இதன்போது கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பசுபிக் கடலில் மூழ்கிய ஜப்பானிய கப்பல் அருகே இலங்கைக் கடற்படைக்க பயிற்சி!
ஜனாதிபதி தேர்தல் 2019: தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்!
நாட்டின் சனத்தொகையில் 70 வீதமானோருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளது - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்...
|
|
|


