புதிதாக அமைக்கப்பட்ட சாட்டி அண்ணமார் இணைப்பு வீதி வேலணை பிரதேச சபை தவிசாளரால் திறந்துவைப்பு!

Monday, November 16th, 2020

வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சாட்டிப் பிரதேசத்தில் நீண்டகாலமாக இருந்துவந்த பிரச்சினையான சாட்டி அண்ணமார் இணைப்பு வீதியை ஊரியிட்டு செப்பனிட்டு மக்களது பாவனைக்கு இன்றையதினம் திறந்துவிடப்பட்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்த்த தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி –

குறித்த வீதியானது நீண்டகாலமாக செப்பனிடப்படாதிழருந்த நிலையில் அப்பகுதி மக்கள் போக்குவரத்தில் பெரும் அசௌகரியங்களை நாளாந்தம் எதிர்கொண்டுவந்தமை எமது சபையின் கவனத்துக்கு காண்டுவரப்பட்டதை அடுத்து சப்ரிகம திட்டத்தினூடாக ஐந்து இலட்சமும் பிரதேச சபையின் இரு உறுப்பினர்களனது ஒதுக்கீட்டிலிருந்து  ஐந்து இலட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு சுமார் பத்து இலட்சம் ரூபா செலவில் ஊரியிடப்பட்டு தற்போது செப்பனிடப்பட்டு மக்களின் பாவனைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் வைபலரீதியான நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றிருந்த நிலையில் குறித்த வீதியை சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி நாடாவெட்டி இன்றையதினம் திறந்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: