புதிதாகத் திருமணமாகி குறைந்த வருமானம் பெறும் தம்பதியருக்குக் காணிகள் – காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை!

Wednesday, December 22nd, 2021

புதிதாக திருமணமான குறைந்த வருமானம் பெறும் தம்பதியினருக்கு 2000 காணிகளை பகிர்ந்தளிக்க காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனடிப்படையில் காணி ஆணையாளர் நாயகம் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் வரும் காணிகள், புதிதாக திருமணமான குறைந்த வருமானம் பெறும் தம்பதியினருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என காணி அமைச்சின் செயலாளரான ஆர்.டி.ரணவக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம்முதல் அனைத்துப் பிரதேச செயலகங்களிலும் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


ஆர்ப்பாட்டங்களை கலைக்க துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம் - ஆணைக்குழுவில் பொலிஸ்மா அதிபர் உறுதியளிப்ப...
இலங்கை ஊடாக பயங்கரவாத தாக்குதல் சாத்தியம் - பயங்கரவாத எதிர்ப்புப் படைகோரி சென்னை உயர் நீதிமன்றில் பொ...
தபால் மூல வாக்களிப்பை தாமதப்படுத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை – ஆணைக்குழு தெரிவிப்...