புதன்கிழமைமுதல் புலமைப்பரிசில் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துவது தடை –தகவலை தெரிவிக்க பரீட்சை திணைக்களத்தால் தொலைபேச் இலக்கங்களும் அறிவிப்பு!

Saturday, December 10th, 2022

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்டு பயிற்சி வகுப்புகள் அல்லது பயிற்சி வகுப்புகளை நடத்துவது எதிர்வரும் புதன்கிழமை (14) முதல் தடைசெய்யப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில் பரீட்சை முடியும் வரை இந்த தடை நீடிக்கும் என ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பாடம் சார்ந்த விரிவுரையாளர்கள், கருத்தரங்குகள் அல்லது வகுப்புகளை ஏற்பாடு செய்தல், பரீட்சை சார்ந்த தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல் மற்றும் பரீட்சைக்கு முன்னர் இதே போன்ற கேள்விகளை வழங்குவதாகக் கூறி இலத்திரனியல் ஊடகங்கள், சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் மூலம் விளம்பரம் செய்தல் என்பன கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.

ஒரு நபர் அல்லது ஒரு நிறுவனம் விதிமுறைகளை மீறுவது கண்டறியப்பட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் அல்லது பரீட்சைகள் திணைக்களத்திலோ அல்லது

காவல்துறை தலைமையகம் தொலைபேசி இலக்கமான  0112421111 அல்லது காவல்துறை அவசர பிரிவு இலக்கமான 119 க்கு அழைப்பதன் மூலம் முறைப்பாடுகளை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பரீட்சைகள் திணைக்களத்தின் அவசர இலக்கம் 1911 இக்கு அல்லது

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தின் இலக்கங்களான 0112785211, 011275212 க்கு

அல்லது பாடசாலை பரீட்சைகள் ஏற்பாடு கிளை இலக்கங்களான 0112784208 – 0112784537 இழைத்து தெரிவிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: